வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில், வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-04-21 07:07 GMT
சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் குகன், 18; இவர், விஷ இலை சாப்பிட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது சித்தப்பா இளையராஜாவின் மனைவியான சிவகுமாரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது சிவகுமாரியின் அக்கா மகன், வாணாபுரம் அடுத்த மரூர் காலனியைச் சேர்ந்த சிங்காரம் மகன் குரு, 20; என்பவர் தடுத்து, திட்டி, பேனா கத்தியால் குகனை குத்தினார். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர் சுமன் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த குகன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து குருவை கைது செய்தனர்.