உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
கம்பம் பகுதியில் மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.;
Update: 2024-04-30 07:19 GMT
கம்பம் பகுதியில் மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஓடக்கரை தெரு பகுதியில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர் அப்போது அங்குள்ள ஒரு கடையில் ரசாயனம் தடவிய மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து அந்த கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது