சத்தியமங்கலம் அருகே மாநில அளவிலான கபடி போட்டி

சத்தியமங்கலம் அருகே உள்ள கே என் பாளையம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

Update: 2024-04-30 11:08 GMT

போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசு வழங்கல்

திமுக ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் என் நல்லசிவம் ஆலோசனைப்படி திமுக சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ எ தேவராஜ் அவர்கள் வழிகாட்டுதலின்படி கெம்பநாயக்கன்பாளையம் நண்பர்கள் மற்றும் ஓம் சக்தி கபடி குழு நடத்தும் ஆறாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபடி தொடர் போட்டி நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்று அணிக்கு பேரூராட்சி கழகச் செயலாளரும் கே என் பாளையம் பன்ற தலைவருமான கே ரவிச்சந்திரன் முதல் பரிசு ரூ.30,000 வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கு கழக திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் வார்டு கவுன்சிலர் ஆகியோர் ஒன்றிணைந்து இருபது ஆயிரம் போட்டியில் பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தாங்கள் திறமை வெளிப்படுத்தினார்கள்.

பரிசளிப்பு விழாவில் பொதுமக்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News