குளச்சல் அருகே தங்கையை தாக்கிய அண்ணன் கொலை முயற்சி வழக்கில் கைது

குளச்சல் அருகே தங்கையை தாக்கிய அண்ணன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-26 13:52 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே லியோன் நகரை சேர்ந்தவர் சகாயராஜ் மனைவி மேரி ஜாஸ்மின் (29). இவரது அண்ணன் சிங்காரவேலன் காலனியை  சேர்ந்த சகாய ஜெனித்மோன் (30). இவர் மீது குளச்சல், வெள்ளிச்சந்தை, பழவூர், உவரி ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.  

     இந்த நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு சகாய ஜெனித் மோன் வழக்கு சம்மந்தமாக கைதாகி  சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தங்கை மேரி ஜாஸ்மின் அவருக்கு பண உதவி செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் தங்கை மீது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.      

சம்பவ தினம்  சகாய ஜெனித் மோன், மேரி ஜாஸ்மின் வீடு புகுந்து கம்பியால் அவரது  தலையில் அடித்துள்ளார். இதை இரண்டு கைகளாலும் தடுத்த போது ரெண்டு முழங்கைகளிலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.        இது குறித்து குளச்சல் போலீசார் சகாய ஜெனித் மோன் மீது கொலை முயற்சி உட்பட மூன்று பிரிகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News