பழனியில் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-05-26 16:11 GMT
பழனியில் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

சாமி தரிசனம் செய்த மக்கள்

  • whatsapp icon

திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் குவிந்து வருகின்றனர். 

 இந்நிலையில் மே மாதம் தொடர் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று காலை 10 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவில் அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.

மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் 2 மணி நேரம் வரையிலும் காத்திருந்து மலைக் கோவிலுக்கு சென்று தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. ஞாயிறு விடுமுறை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News