இலவச வீட்டுமனை கேட்டு கன்னலம் பழங்குடி இருளர் குடும்பத்தினர் மனு

இலவச வீட்டுமனை கேட்டு கன்னலம் பழங்குடி இருளர் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

Update: 2024-06-12 09:06 GMT

இலவச வீட்டுமனை கேட்டு கன்னலம் பழங்குடி இருளர் குடும்பத்தினர் மனு அளித்தனர்.


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத் தில் மேல்மலையனூர் தாலுகா கன்னலம் கிரா மத்தை சேர்ந்த பழங்குடி இருளர் குடும்பத்தினர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கன்னலம் கிராமத்தில் நாங்கள் 5 பழங்குடி இரு ளர் குடும்பத்தினர், எவ்வித அடிப்படை வசதி களும் இன்றி கடந்த 2 தலைமுறையாக வசித்து வருகிறோம். நாங்கள் அரசின் அடையாள அட் டைகளான ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக் காளர் அட்டை பெற்றுள்ளோம். வீட்டு வரியையும் முறையாக செலுத்தி வருகிறோம்.

ஆனால் நாங் கள், குடிநீருக்காக 500 மீட்டர் தொலைவில் மெயின் ரோடு பகுதிக்குச்சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். இதனால் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்துத்தரக்கோரி கன்னலம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இதேபோல் எங்களுக்கு அதே கிராமத்தில் இல வச வீட்டுமனை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

Similar News