கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் பங்கேற்றார்.
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா அளவில் விவசாயப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்தும் அதனை உலகளாவில் ஏற்றுமதி செய்யாமல் மத்திய அரசு விவசாயிகளை இன்னும் பிச்சைக்காரர்களாகவே வைத்துள்ளதாக மாநில தலைவர் இராமகவுண்டர் குற்றச்சாட்டினார்.
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. தமிழ விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் தலமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேஷன். மாநில மகளீர் அணித் தலைவர் பெருமா, மத்திய மாவட்டத் தலைவர் வேலு, மாவட்டத் துணைத் தலைவர் வரதராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சினிவாசன், மத்திய மாவட்ட செயலாளர் ராஜா, ஆலோசகர நஷீர் அகமத், மகளிர் அணியின் சத்தி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனார் .
மேலும் இந்தக் கூட்டத்தின் போது விவசாயத்திற்கு இலவச மின்சரம் வழங்க வேண்டும் என்றும் மற்றும் விவசாய உற்பத்தி பொருள்களுக்கு கட்டுப் படியான விலை நிர்ணையம் செய்ய வழியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு உயயபயத்தியம் உயர் தியாகம் செய்த 54 விவசாயிகளின் நினைவாக நடத்தப்பட உள்ள உழவர் மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெரு திரளாக கலந்துக் கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தலைவர் இராமகவுண்டர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பேக்கேஜ் சிஸ்டம் மூலம் ஏக்கருக்கு 27 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
அது போல கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கும் வறட்சியால் காய்ந்துப்போன மாமரம் ,தென்னை மரம், நெல் ஆகியவற்றிற்கும் பேக்கேஜ் முறையில் இழப்பீடு வழங்க வேண்டும், வனவிலக்குகளான காட்டுபன்றி, யானை மற்றும் மயில்களால் சேதமடைந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவரணத்தை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், இந்தியா அளவில் விவசாயப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்தும் அதனை உலகளாவில் ஏற்றுமதி செய்யாமல் மத்திய அரசு விவசாயிகளை வேடிக்கை பார்பதோடு இன்னும் பிச்சைக்காரர்களாக வைத்துள்ளதாக மாநில தலைவர் இராமகவுண்டர் குற்றச்சாட்டினார். அப்போது விவசாய சங்கத்தினை சேர்ந்த மணிமேகலை, கோவிந்தராஜ் அசோக்குமார், சின்னசாமி, ராமப்பா, சத்தி வேல், சந்தரசேகர், முனிரத்தினம் உள்ளிட்ட ஏராளமான விவசாகளும் காத்துக் கொண்டனர்.