திண்டிவனம் அருகே வாகன விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் உயிரிழப்பு;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 13:52 GMT
கோப்பு படம்
திண்டிவனம் அடுத்த தீவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை மகன் ரமேஷ், 35; இவர், நேற்று பிற்பகல் 1:30 மணியளவில், தீவனுாரிலிருந்து திண்டிவனத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பைக்கில் வந்தார். பைக்கில் அவரது அக்கா மலர், 55; அமர்ந்து வந்தார்.
தீவனுார் அருகே வந்த போது, திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கி வந்த பைக் ரமேஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மலர், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ரோஷணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.