பறிமுதல் செய்யப்பட்ட மது வகைகளை கள்ளச்சந்தையில் விற்றதாக புகார்.
பறிமுதல் செய்யப்பட்ட மது வகைகளை கள்ளச்சந்தையில் விற்றதாக புகாரை அடுத்து மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் 3 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏட்டுகளாக பணியாற்றி வருபவர் கள் முருகானந்தம், தினகரன், மகேஷ். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாக னத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 வாலி பர்களை மடக்கிப்பிடித்து அவர்களிடமிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள உயர்ரக மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அந்த வாலிபர்களை போலீசார் மிரட்டி ரூ.5 ஆயிரம் மாமூல் வாங்கியதோடு, பறிமுதல் செய்யப்பட்ட மதுபான வகைகளை கள்ளச்சந்தை யில் விற்பனை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்த புகார், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து போலீஸ் ஏட்டுகள் முருகானந்தம், தினகரன், மகேஷ் ஆகிய 3 பேரையும் விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத்தரவிட்டார்.
மேலும் இந்த புகார்கள் குறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோ விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் முடிவில் மேற்கண்ட புகார்கள் உண்மையென உறுதி செய்யப்பட்டால் அந்த போலீஸ் ஏட்டுகள் 3 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.