தண்டவாளத்தில் தலை வைத்து இளம்பெண் தற்கொலை
தண்டவாளத்தில் தலை வைத்து இளம்பெண் தற்கொலை. போலீசார் விசாரணை;
Update: 2024-07-08 06:14 GMT
தற்கொலை
சேலம் மின்னாம்பள்ளி ரெயில் நிலையம் அருகில் பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த முருகவேல் மகள் தீபிகா (வயது 19) என்பதும், மன அழுத்தம் காரணமாக நேற்று காலை அந்த வழியாக ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் இறந்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர்.