காங்கேயம் வீரணம்பாளையம் ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் இடையே உட்கட்சி  பூசல்  - தொலைபேசி பதிவுகளை வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் பரபரப்பு.

வீரணம்பாளையம் ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் இடையே உட்கட்சி பூசல் - வாட்ஸ்அப்,பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைபகிரப்படுவது பரபரப்பு. சட்டமன்ற தேர்தலில் தற்போதைய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு எதிராக வாக்கு கேட்டதாக தலைவி மீது புகார்

Update: 2024-07-19 14:52 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வீரணம்பாளையம் ஊராட்சி.இந்த  ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் இடையே உட்கட்சி பூசல் - ஒருவரை ஒருவர் வாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சட்டமன்ற தேர்தலில் தற்போதைய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு எதிராக வாக்கு கேட்ட  இரு நிர்வாகிகள் பேசிக்கொள்ளும் ஆடியோக்கள் வெளியீடு. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சி மானம் காற்றில் பறப்பதாக குமுறல்.நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் என கட்சி நிர்வாகிகள் புலம்பல் . காங்கேயம் அடுத்துள்ளது வீரணம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பேபி @ உமாநாயகி. காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள மகளிர் குழுக்களுக்கு டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.  அப்படி வழங்கப்பட்ட டிராக்டரை வீரணம்பாளையம் தலைவர் தன் சொந்த வீடு கட்டும் பணிக்கும்  தோட்டத்து வேலைகளுக்கு பயன்படுத்துவதாக சொந்த கட்சியினரே நொந்துபோயுள்ளனர். இது குறித்து திமுக வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் வடிவேல் என்பவர் கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அந்த ஸ்டேட்டஸ் பலரும் பதிவிறக்கம் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் காங்கேயம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மத்தியில்  சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் முன்னாள் திமுக இளைஞரணியை துணை அமைப்பாளர் நந்தகுமார் இதுகுறித்து  திமுக வர்த்தக அணியை சேர்ந்த வடிவேல் என்பரிடம் சமாதானம் பேசுவதாக ஒரு 30 நிமிட தொலைபேசி உரையாடல் தற்போது காங்கேயம் பகுதிகளில் வைரலாக  பரவிவருகின்றது. ஏனுங்க மச்சான் என்ன பண்றீங்க என கேட்டு  நந்தகுமார் தொடங்குவதும்  பின்னர் வடிவேல் அவர்கள் வீட்டில் என்று துவங்கப்பட்டு எதுக்கு மச்சான் சமூகவலைத்தளங்களில் பதிவுகளை போட்டிர்கள் என்றும் நந்தகுமார் கேட்க அதற்க்கு வடிவேலு  சட்டமன்ற தேர்தலில் தற்போதைய செய்தி துறை அமைச்சருக்கு எதிராக வீரணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டதாகவும் அதனால் நான் சும்மா விடமாட்டேன் எனவும் இந்த தலைவர் எப்போதும்  திமுக நிர்வாகிகளை மதிப்பதில்லை எனவும்  அமைச்சரையே  தரக்குறைவாக பேசும்  ஆடியோக்களும் என்னிடம்  உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். கட்சியில் இல்லாதவரை தலைவராக்கியதும் இவர் எந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என் போகிறது அந்த ஆடியோ. "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் " எனவும் "ஊரறிந்த பாப்பானுக்கு பூணுல் எதற்கு" போன்ற அருவருக்கத்தக்க வசனங்களை நந்தகுமார் பேசுவதும் இந்த பதிவுகளை அதிமுக நிர்வாகிகளும், நிருபர்களும் பார்த்தால் வீரணம்பாளையம் திமுகவில் புகைச்சல் என்று பதிவிடுவார்கள் என்று கூறுவதாக பேசுகின்றனர். மேலும் நம்முளுக்குள் வாக்குவாதம் செய்தால் அதிமுக வேட்பாளர் தான் வெற்றி பெறுவார்கள் என்றும் அடுத்த 5 வருடங்களுக்கு எதிர்கட்சியினரிடம்  நாம் போய் கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பேசும் ஆடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு திமுக நிர்வாகிகள் பேசிக்கொண்ட ஆடியோ எவ்வாறு வெளியிடப்பட்டது. இல்லை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செல்போன் பேச்சுக்கள் பதிவு செய்யாப்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் திமுகவில் இல்லாதவரை வேட்பாளராக நிறுத்தியதா திமுக என்ற கேள்வியும் சட்டமன்ற தேர்தலில் தற்போதுய அமைச்சருக்கு எதிராக வாக்கு கேட்டவர் என்று தெரிந்தும் கட்சி மேலிடம்  நடவடிக்கை எடுக்கவில்லையா?என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும்  உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக  கட்சி மானம் காற்றில் பறக்குது என்கின்றனர் திமுகவின் உண்மையான நிர்வாகிகள். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்  என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்து  காத்திருக்கின்றனர்.

Similar News