வெள்ளகோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை - கணவன் காங்கேயம் காவல்நிலையம் சரண் 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே பச்சாபாளையம் காலனி அருகே தனியாருக்கு சொந்தமான TRK நூல்லில் பெண் கொலை. மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த அடுத்த நாள் காலையில் மனைவியை கொன்றுவிட்டு கணவன் போலீசில் சரண் வெள்ளகோவில் காவல்துறை விசாரணை. 

Update: 2024-07-22 15:40 GMT
காங்கேயம் வெள்ளகோவில்  பச்சாபாளையம் காலனி அருகே தனியாருக்கு சொந்தமான TRK நூல்லில் தங்கி பணியாற்றி வருபவர் நர்மதா(31). இவருக்கு  குருபிரசாத் (9), ரித்திகா (6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தனது அத்தை மகனான சிவக்குமாரை (39) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடைய கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில் நேற்று  குருபிரசாத்திற்கு பிறந்தநாள் என்பதால்  (9) சிவக்குமார் சனிக்கிழமை இரவே மில்லிற்கு வந்து தங்கி இருந்து நேற்று சிவன்மலை கோவிலுக்கு எல்லாம் சென்றுவிட்டு இரவு மகனின் பிறந்த நாளை மில் குடியிருப்பு அருகே உள்ளவர்களுடன் கொண்டடாடி உள்ளனர். பின்னர் இரவு கணவன் மனைவி மற்றும் மனைவியுடன் பணிபுரியும் பானுபிரியா, சங்கீதா ஆகியோருடன் தூங்க சென்றனர். பின்னர் காலை 6 மணிக்கு முதல் சிப்ட்டில் பானுபிரியா,சங்கீதா ஆகியோர் பணிக்கு சென்ற நிலையில் சிவக்குமார் அவசரஅவசரமாக பதட்டத்துடன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்வதை அருகே இருந்த குடிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.பின்னர் குழந்தை அழும் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுள்ளதை அடுத்து வீட்டின் கதவை திறந்து பார்த்தால் நர்மதா ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர் வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ், உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையனா காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் அருகே மண்ணைவியை கணவனே கொலைசெய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு கணவன் சிவகுமார் காங்கேயம் காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டான் . விசாரணையில் மீண்டும் கணவன் மனைவி சேர்ந்து வாழலாம் என தெரிவித்த போது மனைவி மறுத்துவிட்டதாகவும் பின்னர் இன்று காலை பக்கத்துவீட்டு குழந்தை அழுகின்றது வீட்டில் உள்ள பால் பாக்கெட் எடுத்து கொடுக்கும் படி மனைவி கூறியதாகவும்  அதற்க்கு சிவகுமார் அடுத்த வீட்டு குழந்தைகளுக்கு எதற்கு நான் வேலை செய்ய வேண்டும் என கூறியதாகவும் இதனால் ஆவேசம் முடிந்த நர்மதா அப்போது நீ என்வீட்டில் இருக்கவேண்டாம் வெளியே போ என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார் வீட்டில் காய்கறிகள் வெட்ட வைத்திருக்கும் கத்தியை எடுத்து நர்மதா கழுத்தில் குத்திவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகின்றது. கணவன் மனைவிக்கு 2 சிறுகுழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் புரிந்துகொண்ட சேர்ந்து வாழவேண்டிய வயதில் ஆத்திரத்தில் தாய் இறந்தும் தந்தை சிறைக்கும் செல்வதால் குழந்தைகள் ஆதரவற்று நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது

Similar News