பரமத்தி வேலூரில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி.
பரமத்தி வேலூரில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர் ஜூலை.23: பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட காவலர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நாதன் மருத்துவமனை சார்பில் மருத்துவ முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா தலைமை வகித்தார். வேலூர் மற்றும் பரமத்தி காவல் ஆய்வாளர்கள் ரங்கசாமி, கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாமில் நாதன் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு நெஞ்சு வலி, விபத்தில் கை, கால் முறிவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது. குழந்தைகள் பொருட்களை விழுங்கி விட்டால் அதை எப்படி கையாள்வது, விபத்து ஏற்படும் இடங்களில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முதலுதவி சிகிச்சை குறித்து நேரடியாக உருவ பொம்மைகள் மூலமும், காவலர்கல் மூலமும் செய்முறையில் செய்து காண்பித்தனர். மருத்துவர் அரவிந்த்குமார், மோகன்ராஜ், ரியாஸ்தீன் ஆகியோர் முதலுதவி குறித்து போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். முடிவில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை மருத்துவர் விமல்நாதன் வழங்கினார்.