விழுப்புரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக எம்பி சி.வி சண்முகம் பங்கேற்பு

Update: 2024-07-23 12:12 GMT
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் அதிமுக சார்பில் தமிழக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வை கண்டித்தும், பாமாயில், பருப்பு நியாய விலைக்கடையில் விற்பனையை நிறுத்த முயற்சிப்பதை கண்டித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்சுனன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி வி சண்முகம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லை கள்ளச்சாராயம் கிடைப்பதாகவும், மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தினால் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு அதனை தடுக்காததால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சிபிசி ஐ டி போலீசார் விசாரனை செய்து இரண்டு கடிதங்களை டிஜிபிக்கு எழுதி கொடுத்ததில் தமிழகத்தில் மெத்தனால் சர்வசாதாரணமான கிடைப்பதாகவும் அதனை தடுக்க வேண்டுமென குறிப்பிட்டு சி பி சி ஐ டி ஏடிஜிபி அந்த கடித்ததில் எழுதபட்டிருந்ததாகவும் ஆனால் தமிழக முதலமைச்சருக்கு இது தெரியுமா தெரியாதா அல்லாது தெரிந்தும் அமைதி காத்தாரா என கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையும், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து எத்தனை நபருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது கடந்த மூன்றாண்டுகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறினார். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, பால்விலை, உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அடுத்து பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்குவதற்கான நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது தன் மகனை துணை முதலமைச்சராக்க ஆக்க காட்டுற அக்கறை மக்கள் மீது ஸ்டாலினுக்கு காட்டவில்லை என காட்டமாக தெரிவித்தார்.

Similar News