வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

அச்சிறுப்பாக்கம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2024-07-24 12:15 GMT
வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா
அச்சிறுப்பாக்கம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்காக புதுப்பிக்கப்பட்டு பஞ்ச வர்ணங்கள் பூசி கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவானது நேற்று முன்தினம் மங்கல இசை முழங்க விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாகவாசனம், லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கோபூஜை, கணபதி பூஜை, பூரணாதி, தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை மங்கள இசை உடன் நான்காம் கால யாக பூஜை, நாடி சாந்தினம், தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 9 மணி அளவில் கோவில் கோபுர கலசத்திற்கு யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை சிவாச்சாரியார்கள் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது . இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News