பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம் மயானத்தில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.
பரமத்தி வேலூர், நல்லியாம்பாளையம் மயானத்தில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி வேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர், ஜூலை:25- புதன்கிழமை காலை நல்வியாம்பாளையத்தில் உள்ள மாயானத்தில் உள்ள தகர கொட்டகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு தொங்கி கொண்டிருப்பதாக வேலூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலதுறையிவர் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு சேர்த்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரமத்தி வேலூர் நல்லியம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணி (என்பது தெரியவந்தது இவரது மனைவி வசந்தாவுடன் (55) ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வந்த சுப்பிரமணி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இதனால் மயானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இறந்து போன சுப்பிரமணிக்கு இரண்டு மகள்கள் அதில் ஒரு மகள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.