தமிழ்நாடு மின்சார வாரிய கவர்மெண்ட் தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு மின்சார வாரிய கவர்மெண்ட் தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகரில் தமிழ்நாடு மின்சார வாரிய கவர்மெண்ட் தொழிலாளர் சங்கம் சார்பாக மண்டல செயலாளர் அருண்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு விருதுநகரில் உள்ள தமிழ்நாடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக மண்டல செயலாளர் அருண்குமார் தலைமையில் , தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாளர்கள்ன 63,000 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரிய அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக மாற்றிட வேண்டும்,குடும்பத்தைப் பிரிந்து 400,500 கிலோ மீட்டர் தூரத்தில் பணி அமர்த்தப்பட்டு கடுமையான பணிசுமையிலும் மன அழுத்தத்துடனும் பணி மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு இடம் மாற்றம் செய்திட வேண்டும் உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மின்சார வாரிய நிர்வாக குழு அனுமதி வழங்கியும் பணி அமர்த்தப்படாமல் நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்