பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதம் இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்திவேலூர், ஜுலை.27- பரமத்தி வேலூர் பரமத்தியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் கோயிலில் ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தியில் எழுந்தருளியுள்ள அங்காள அம்மனுக்கு சிறப்பு பூஜை இரண்டாம் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள் மற்றும் மஞ்சள் கயிற்றில் ஆனா தாலி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், வேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன் மற்றும் பரமத்திவேலுார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.