தாளவாடி அருகே ரோட்டில் மரம் முறிந்து விழுந்து ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்பு

தாளவாடி அருகே ரோட்டில் மரம் முறிந்து விழுந்து ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்பு

Update: 2024-07-26 14:29 GMT
தாளவாடி அருகே ரோட்டில் மரம் முறிந்து விழுந்து ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்பு ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெஜலட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த கர்ப்பினிப் பெண் ஒருவர்க்கு உடல் நலம் சரியில்லாததால் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர். சம்பவயிடத்திற்குச் சென்ற ஆம்புலன்ஸ் நோயாளியை ஏற்றிக் கொண்டு பெஜலட்டியிலிருந்து திம்பம் செல்லும் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்றது. வனப்பகுதி சாலையில் காற்றின் வேகம் காரணமாக மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஆம்புலன்ஸ் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது. அவசர சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் செய்வதறியாது திகைத்து நின்றனர். உடனடியாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தி ஆசனூர் மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண்ணை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். துரிதமாக செயல்பட்டு கர்ப்பிணிப் பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற 108 'ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Similar News