கந்தம்பாளையம் அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி படுகாயம்.
பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.
பரமத்தி வேலூர், ஜூலை. 27:- சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசமணி கிராமம் குள்ளம்பட்டி பதிவு சேர்ந்தவர் ராஜாமணி (50).இவர் தேங்காய் வெட்டும் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் வருவதற்காக திருச்செங்கோடு- பரமத்திவேலூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மணியனூர் அருகே பிச்சப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதே சாலையில் அவருக்கு பின்னால் அதிவேகமாக மினி லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (38) என்பவர் ராஜாமணி ஒட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் ராஜாமணிக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜாமணி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து மினி லாரியை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சதீஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.