தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்படுள்ள குப்பையில் தொடர்  தீ விபத்து கண்டுகொள்ளாத ஆய்வுக்கு வந்த அதிகாரி.

பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் ஏற்படும் தொடர்  தீ விபத்திஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் விரக்த்தி.

Update: 2024-07-27 15:56 GMT
பரமத்தி வேலூர்,ஜூலை:28- நாமக்கல் மாவட்டம்,, பமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தின் அருகில் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் வேலூர் பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை இந்த பகுதிகளில் கொட்டி வருகின்றனர். மேலும் வேலூர் பகுதிகளில் உள்ள உணவகங்கள்,டீ கடைகள்,சாலையோரக் கடைகள்,இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகள் அப்பகுதியில் மலை போல் குவிந்து உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததில் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் எழும்பி சாலையில் வாகனத்தில் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தினால் அதில் எழும் புகையால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கழமை வேலூர் மற்றும் பொத்தனூர் பேரூராட்சிகளில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் நிர்வாக பொறியாளர் சாய்ராஜ் ஆய்வுக்கு வந்திருந்தார். ஆய்வுக்கு வந்திருந்த மண்டல பொறியாளரிடம் வேலூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் அப்பகுதிக்கு நேரில் வந்து பார்வையிடுமாறு தகவல் தெரிவித்தும் ஆதிகாரிகள் வரவில்லை. இதால் அப்பகுதி மக்கள் விரக்த்தி அடைந்தனர்.

Similar News