மோதல் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது

கைது

Update: 2024-07-29 00:37 GMT
கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பாரதிராஜா, 36; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன்கள் கோவிந்தன், ராமசாமி ஆகியோருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு 7.30 மணி அளவில் பால்ராம்பட்டு எம்.ஜி.ஆர்., சிலை அருகே பாரதிராஜா பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரை வழி மறித்து கோவிந்தன் மற்றும் ராமசாமி ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவரது பைக்கையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளை யம் போலீசார் கோவிந்தன், 46; ராமசாமி, 44; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News