ஆடி கிருத்திகை முன்னிட்டு கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் படி பூஜை.

பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு படி பூஜை நடைபெற்றது.

Update: 2024-07-29 07:34 GMT
பரமத்தி வேலூர்:30- பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற. பாலசுப்ரமணிய கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல 120 படிகளை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை தடைபெறும். அதில் மிகவும் பிரசித்தி பெற்ற படி பூஜை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதே போல் இந்த வருடமும் படி பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் 120 படிகளுக்கும் வெற்றிலை பாக்கு,பூக்கள்,தேங்காய் வைத்து முருகன் பாடல் பாடியும் தீபாராதனை காண்பித்து ஒவ்வொறு படிக்கட்டுகளிலும் தேங்காய் உடைத்து முருகனை வழிபட்டு மலையேறி சென்றனர். தொடர்ந்து படி பூஜை நிறைவு பெற்றவுடன் மாதியம் மூலவர் சன்னதியில் உள்ள முருகனுக்கு பால்,பன்னீர்,மஞ்சள்,திருமஞ்சள்,பஞ்சாமிருதம்,திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஆடி கிருத்திகை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News