வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி

பயிற்சி

Update: 2024-07-30 02:17 GMT
பேரால் கிராமத்தில் அங்கக வேளாண்மை இடுபொருட்கள் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ரிஷிவந்தியம் அடுத்த பேரால் கிராமத்தில் ஆத்மா திட்டம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, வேளாண்மை உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜ், ஊராட்சி தலைவர் ராஜி முன்னிலை வகித்தனர். அங்கக வேளாண்மை இடுபொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சி விரட்டிகள், ரசாயண உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல், மண் வளம், உழவர் செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் பசுந்தாள் உரம், சணப்பை, நெல் மற்றும் உளுந்து விதைகள், கடப்பாறை, மண்வெட்டி, களைக்கொத்தி, அரிவாள், இரும்பு சட்டி ஆகியவற்றை வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை அலுவலர் புஷ்பவள்ளி, உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்பாஸ், வேலு, தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மேரிஆனந்தி, சுகனேஸ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News