தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் திறப்பு விழா

விழா

Update: 2024-07-30 02:21 GMT
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.95 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இப்புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார். இதையடுத்து கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி இனிப்புவழங்கினர். மலையரசன் எம்.பி., திட்ட இயக்குனர் தனபதி, ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா திட்டக்குழு தலைவர் அண்ணாதுரை, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள்,பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகந்நாதன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ.,க்கள் தினகர் பாபு, தயாபரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் சுப்பு மகாலிங்கம்,கள்ளக்குறிச்சி நகராட்சி சேர்மன் சுப்பராயலு, ஒன்றிய சேர்மன்கள் ராஜவேலு, சத்தியமூர்த்தி, பேரூராட்சி சேர்மன் வீராசாமி, தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடாசலம், எத்திராஜ், கலியன், கணேசன், சாமிதுரை, ராமலிங்கம் உட்படஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

Similar News