சின்னசேலம் அருகே பைக் திருட்டு போலீசார் விசாரணை

விசாரணை

Update: 2024-07-31 00:31 GMT
சின்னசேலம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம் அடுத்த மரவாநத்தம் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்,30; இவர் தனது ஹீரோ ஹோண்டா ஆக்டிவாவை (டி.என் 15 எம். இ 4529) கடந்த 27ம் தேதி இரவு வீட்டின் முன், நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது அங்கிருந்த அவரது வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Similar News