நூல் மில்லில் பெண் தொழிலாளி திடீர் பலி
வெள்ளக்கோவிலிற்கு நூல் மில்லில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளி திடீர் பலி வெள்ளகோவில் காவல்துறை விசாரணை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கரடிப்பட்டி எஸ்.எம்.சி. நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி இவர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி நாமகிரி (வயது 68). இவர்களுக்கு கிருஷ்ணவேணி (45) விஜயலட்சுமி (40) மாலதி (36) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மாலதியின் கணவர் ரமேஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். தற்போது மாலதி வள்ளியரச்சல் அடுத்த பெருங்கருணைபாளையத்தில் தங்கி இருந்து வெள்ளகோவில் வள்ளியறச்சல் சாலையில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மில்லில் இருந்தபோது மாலை திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே உள்ளூர்மருத்துவர் மூலமாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்ததாக தெரிவித்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.