பா.ஜ.க தலைவர் கொலை மிரட்டல் விடுவதாக ஒன்றிய செயலாளர் புகார்
பா.ஜ.க தலைவர் கொலை மிரட்டல் விடுவதாக ஒன்றிய செயலாளர் புகார்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீர சின்னம்பட்டியை சேர்ந்தவர் தனபால் கடந்த 14 ஆண்டுகளாக பா.ஜ.க ஒன்றிய செயலாளர் ஆகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஓபிசி அணி தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சாணார்பட்டி ஒன்றிய செயலாளராக இருந்து வந்த தனபாலை கட்சியை விட்டு ஓரம் கட்டும் நோக்குடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் செயல்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து மாவட்ட தலைமைக்கு தெரியும் வகையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கக் கோரி சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் தனபால் முகநூலில் பதிவிட்டு இருந்துள்ளார். இதனை முகநூலில் பதிவு செய்து இருந்ததைப் பார்த்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் பதிவிட்டவைகளை, நீக்க விட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும், தனது ஊனத்தை காரணமாக காட்டி தன்னை இழிவுப்படுத்தி பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, திண்டுக்கல மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மீது புகார் அளித்துள்ளார்.