வீரணம்பாளையத்தில் பிஏபி வாய்க்காலில் காங்கிரட் கலவை கொட்டப்படும் அவலம் கடமடைக்கு தண்ணீர் வருவதில்லை என குற்றச்சாட்டு

காங்கேயம் ஒன்றியம் வீரணம் பாளையத்தில் காங்கிரீட் கலவை கொட்டப்படும் இடமாக பிஏபி கால்வாய் மாறி வருகிறது இதனால் கடைமடைக்கு தண்ணீர் வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Update: 2024-08-01 07:29 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரணம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பழைய கோட்டை சாலை பிஏபி பாசன கால்வாயில் இருந்து பிரிந்து வரும் உப பகிர்மான கால்வாய் சத்யா நகர்,முல்லை நகர் தொடர்ந்து வீரணம் பாளையம் வரை செல்கிறது. இந்த கால்வாயின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்களும் பிஏபி பாசன விவசாய நிலங்களும் பயன்பெறும். இந்த நிலங்களுக்கு செல்லும் பிஏபி உப பகிர்மான கால்வாயில் உள்ளே கான்கிரீட் கலவைகளும், குப்பைகளும், அழுக்கு துணி மூட்டைகளையும் சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் இந்த கால்வாயே கடந்த பல வருடங்களாக சில இடங்களில் பெயர்ந்து போய் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு கால்வாய் இருந்த சுவடு அழிந்துள்ளது. மேலும் வரும் 15ஆம் தேதிக்குள் பிஏபி கால் வாயில் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாறு கால்வாயில் குப்பைகளும், கற்களும், கட்டிடக்கழிவுகளும், காங்கிரீட் கலவைகளும் குவிந்து கால்வாயே காணாமல் போய் உள்ளது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல மாதங்கள் தண்ணீர் வராமல் இருப்பதாலும் உரிய நீர் திறக்கப்படாததாலும் கால்வாயில் குப்பைகளும் தொடர்ச்சியாக கொட்டப்படுகிறது. எனவே இது போன்ற விவசாயத்திற்கு பயன்படும் கால்வாயில் கழிவுப்பொருட்களையும் குப்பைகளையும் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்று கவனிப்பாரற்று கிடக்கும் கால்வாயை தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிஏபி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News