நிலத்தடி நீரினை உயர்த்த ஆட்சியர்  வேண்டுகோள்

கன்னியாகுமரி

Update: 2024-08-01 08:23 GMT
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதி நவீன மின்னணு வாகனத்தின் வாயிலாக திரையிட்டு பிரச்சாரத்தினை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர்  தெரிவிக்கையில்:-   மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த  குறும்படம், மற்றும் குறும் பாடல்கள் தயாரிக்கப்பட்டு அவற்றினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதி நவீன மின்னணு வாகனத்தின் வாயிலாக திரையிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டு இன்று விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.    மழை காலங்களில் பொழியும் மழை நீரினை சேமிக்க வேண்டும். மழை நீரினை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து நிலம் வறட்சி அடையாமல் பசுமையாகி குடிதண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். இதன் மூலம் மாவட்டத்தில் விவசாயம் செழிப்படையும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.     தொடர்ந்து  ஆட்சியர் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியதோடு, நீர்தர பரிசோதனை செயல்முறை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.       நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News