பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்போம் போராட்டம்

இரணியலில்

Update: 2024-08-01 08:25 GMT
குமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அலுவலக அரங்கில் நடைபெற்றது. தலைவர் ஸ்ரீகலா முருகன் தலைமையில் நடந்த  இந்த கூட்டத்தில் 14 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து விவாதம் நடந்தது.        அப்போது தலைவர் உட்பட ஐந்து கவுன்சிலர்கள் அரங்கை விட்டு வெளியேறினார்கள்  9 கவுன்சிலர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என செயல் அலுவலரிடம் கூறினர். ஆனால் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக செயல் அலுவலர் தரப்பில் கூறப்பட்டது.     இந்த   கூட்ட ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும், தங்கள் கேள்விகளுக்கு முறையான பதில் தர வேண்டும் என 9 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் என உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 8 பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் உட்பட ஒன்பது பேர் கலந்து கொண்டனர். பேரூராட்சி உரிய பதில் தருவது வரை இந்த போராட்டம் தொடரும் என கவுன்சிலர்கள் கூறினார்கள்.

Similar News