உலக சாதனை படைத்த இளைஞருக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து!.

தூத்துக்குடியில் 3 நோபல் உலக சாதனை படைத்த இளைஞர் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துபெற்றார்..

Update: 2024-08-01 08:50 GMT
தூத்துக்குடி அருகே பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் ஆர்யா ஸ்கிப்பிங், தொடர்ச்சியாக நிஞ்சாக் சுழற்றி 3 நோபல் உலக சாதனை படைத்துள்ளார். போதை போன்ற தவறான வழிகளில் இளைஞர்கள் போகக்கூடாது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஸ்பிக் நகர் கீதாமெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக இளைஞர்கள் தின விழா மற்றும் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழாவின் போது, ஆர்யா, தனது முதுகில் 30.3 கிலோ எடையுள்ள பாரத்தை சுமந்து கொண்டு தொடர்ச்சியாக 3 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் விளையாட்டில் ஈடுபட்டு, 366 சுற்றுகளை பெற்று உலக சாதனை படைத்தார். மேலும் இரு கைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் 11 நிமிடம் நிஞ்சாக் சுழற்றியும், அரை மணி நேரம் ஒரு கையை பயன்படுத்தி நிஞ்சாக் சுழற்றி என 3 நோபல் உலக சாதனைகளை நிகழ்வு படைத்துள்ளார். இதன் நடுவர்களாக நோபல் உலக சாதனை நிறுவனத்தின் மாநில தலைமை செயல் அலுவலர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், தேசிய அமைப்பாளர் பரத்குமார் ஆகியோர் இருந்தனர். இதனை தொடர்ந்து, ஆர்யா உலக சாதனை பெற்றுள்ளதாக, நடுவர்கள் அறிவித்ததுடன், அவருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதனையடுத்து, ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் முத்துசாமி, ரேவதி, ஸ்கிப்பிங் பயிற்சியாளர் ஐயப்பன் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், போல்பேட்டையில் உள்ள முகாம அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் 3 நோபல் உலக சாதனைகளை நிகழ்த்திய இளைஞர் ஆர்யாவை வரவழைத்து பாராட்டினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் பெருமாள், மற்றும் ஆர்யாவின் குடும்பத்தினர் உடனிருந்தனர்...

Similar News