அனல்மின் நிலைய ஊழியர் தற்கொலை!.
தூத்துக்குடியில் மது குடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் அனல்மின் நிலைய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் மது குடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் அனல்மின் நிலைய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் கார்த்திக் ராகுல் (24), இவர் தூத்துக்குடி என்.எல்.சி., அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மது குடித்து விட்டு வந்ததால் அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த கார்த்திக் ராகுல் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..