சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது

Update: 2024-08-01 09:36 GMT
சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் வி.எஸ்.விவேகானந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் நரேஷ்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் வருகிற 5-ந் தேதி முதல் கோர்ட்டு புறக்கணிப்பை விலக்கி கொண்டு அன்று முதல் கோர்ட்டு பணிகளில் ஈடுபடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சங்க துணைச்செயலாளர் ஜெயப்பிரகாஷ், நூலகர் கந்தவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க துணைத்தலைவர் சுகவனேஸ்வரன் நன்றி கூறினார்.

Similar News