இயற்கை வள பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில்
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் இயற்கை வள பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சந்தியூர் கிரிஷ் விக்யான் கேந்ராவின் வனவியல் துறை உதவி பேராசிரியை கிருபா கலந்து கொண்டு சுற்றுச்சூழல் மேலாண்மை, இயற்கை வளத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் இயற்கை வளம் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது. இதில் துறையை சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் சுற்றுச்சூழல் அமைப்பின் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.