கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று (01.08.2024) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில்:- இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கூலித்தொழில் செய்யும் ஏழை எளிய மக்களின் வசதிக்குகேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அவர்கள் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் வழிவகை செய்கிறது. 15 அரசு துறைகளை சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து தகுதியான விண்ணப்பங்களுக்கு 30 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். என தெரிவித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பாபு, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் தமிழரசி, அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.