உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு பேரணி.

தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-08-01 11:47 GMT
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. அதன் முதல் நாள் நிகழ்ச்சியாக தாய்ப்பாலின் சிறப்பம்சம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் சிவகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் கலைவாணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், மருத்துவ துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, குழந்தைகள் நலத்துறை துறைத்தலைவர் அருணாச்சலம், செவிலியர் பயிற்சிபள்ளி முதல்வர் ஞானசிரோன்மணி கெலன் இந்திராணி, செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தகுமாரி மற்றும் குழந்தைகள் நலத்துறை உதவிப் பேராசிரியர்கள், முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பேரணி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள செவிலியர் பயிற்சி பள்ளியிலிருந்து தொடங்கி, தெற்கு காவல் நிலையம் வழியாக மருத்துவமனை வளாகத்தினுள் நிறைவு பெற்றது. இப்பேரணியில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்று "தாய்ப்பால் குழந்தைக்கு தரப்படும் முதல் தடுப்பு மருந்து", 'தமிழுக்கு உயிரூட்டுவது முப்பால்: குழந்தைக்கு உயிரூட்டுவது தாய்ப்பால்" போன்ற விழிப்புணர்வு முழக்கங்களை எழுதிய பதாகைகளை கரங்களில் ஏந்திய வண்ணம் முழங்கிச் சென்றனர்..

Similar News