கரூரில் படைப்பாளர்களுக்கு பாராட்டு விருது விழா நடைபெற்றது.
கரூரில் படைப்பாளர்களுக்கு பாராட்டு விருது விழா நடைபெற்றது.
கரூரில் படைப்பாளர்களுக்கு பாராட்டு விருது விழா நடைபெற்றது. கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டல் கூட்டரங்கில் படைப்பாளர் பாராட்டு விருது விழா நிகழ்ச்சி திருக்குறள் பேரவை தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குறள் செல்வம் என்கிற ஆரா. பழ. ஈஸ்வரமூர்த்தி, யோகா ஆர் எஸ் வையாபுரி உள்ளிட்ட தமிழ் புலவர்கள், படைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் செம்மல் நாவை சிவம் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வும், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ஜோதி படைப்பாளர் மற்றும் சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும், யோகா ஆர்.எஸ்.வையாபுரி ஐயா 84 வது பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு செய்தும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழனியப்பன். மேலும் , இந்த நிகழ்ச்சியில், மணல்மேடு குருநாதன், தென்னிலையார், அறிவு கண்ணன், முனைவர். கடவூர் மணிமாறன், பாவலர் எழில்வாணன், முனைவர் கரூவூர் கன்னல் ஆகியோர் வாழ்த்துரையும், ஏற்புறையும் நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் கேரளாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.