பெரியதாதம்பாளையம் அருகே நடந்து சென்ற பள்ளி மாணவன் மீது கார் மோதி விபத்து. மாணவன் படுகாயம்.
பெரியதாதம்பாளையம் அருகே நடந்து சென்ற பள்ளி மாணவன் மீது கார் மோதி விபத்து. மாணவன் படுகாயம்.
பெரியதாதம்பாளையம் அருகே நடந்து சென்ற பள்ளி மாணவன் மீது கார் மோதி விபத்து. மாணவன் படுகாயம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, பள்ளபாளையம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மகாராஜா மகன் மதன் கார்த்தி வயது 14. இவர் அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், ஜூலை 29ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், பெரியதாதம்பாளையம் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் கரூர், வாங்க பாளையம், வெள்ளக்கல் தெருவை சேர்ந்த சுப்பிரமணி வயது 60 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், நடந்து சென்ற மதன் கார்த்தி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவன் மதன் கார்த்திக்கு தலை,முகம்,வலது கண், இடது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக மாணவனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மதன் கார்த்திக் தந்தை மகாராஜா காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.