காந்திகிராமம் அருகே காரின் கதவை திறக்கும் போது சமிக்கை எதுவும் செய்யாததால் டூ வீலர் மோதி விபத்து.
காந்திகிராமம் அருகே காரின் கதவை திறக்கும் போது சமிக்கை எதுவும் செய்யாததால் டூ வீலர் மோதி விபத்து.
காந்திகிராமம் அருகே காரின் கதவை திறக்கும் போது சமிக்கை எதுவும் செய்யாததால் டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மனைவி தனபாக்கியம் வயது 35. இவர் ஜூலை 28ஆம் தேதி மாலை 5 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கரூர், காந்திகிராமம் பகுதியில் உள்ள கோலி சோடா டீக்கடை அருகே வந்தபோது, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, உள் வீரராக்கியம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் வயது 36 என்பவர் ஓட்டி வந்த காரை, எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் நிறுத்தி, காரின் கதவை திறந்து இறங்க முற்பட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத தனபாக்கியம், ஓட்டி சென்ற டூவீலர் காரின் கதவு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தனபாக்கியத்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராமன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனபாக்கியம் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென திறந்து விபத்து ஏற்பட காரணமான பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல் துறையினர்.