ராசிபுரம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை : மக்கள் மகிழ்ச்சி..
ராசிபுரம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை : மக்கள் மகிழ்ச்சி..
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமைய்யம் அறிவித்தது . இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலநாட்களாவே வெய்யில் வாட்டிவந்த நிலையில் தீடிரென மிதமானமழை பெய்தது. தொடர்ந்து கன மழையாக 1.மணி நேரத்திற்கும் மேலாக மழைபெய்து. இந்த மழையானது ராசிபுரம், பட்டணம் ,நாமகிரிபேட்டை, சீராப்பள்ளி, காக்காவேரி , குருசாமிபாளையம், உள்ளிட்ட ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிளில் மழைபெய்தது இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் சாக்கடை நீரூடன் மழைநீர் கலந்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.