சேங்கல் அருகே பணிச்சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட உதவி தலைமை ஆசிரியர்.

சேங்கல் அருகே பணிச்சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட உதவி தலைமை ஆசிரியர்.

Update: 2024-08-01 14:19 GMT
சேங்கல் அருகே பணிச்சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட உதவி தலைமை ஆசிரியர். கரூர் மாவட்டம், பொரணி அருகே உள்ள ஆனந்த கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் வயது 49. இவர், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள, சேங்கல் பகுதியில் செயல்படும் காவேரி மெட்ரிக் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அங்கே இவருக்கு பணிச்சுமை அதிகரித்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில், நடைப்பயிற்சி மேற்கொண்டு வருவதாக சொல்லிவிட்டு சென்ற சரவணகுமார், ஆனந்த கவுண்டனூர் பகுதியில் உள்ள திருஞானம் என்பவர் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த சரவணகுமாரின் மனைவி மகாலட்சுமி வயது 45 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சரவணகுமார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News