நகர வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு

ஆய்வு

Update: 2024-08-02 00:26 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள் உடன் வருபவர்கள் தங்குவதற்காக ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கச்சேரி சாலையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர அரசு ஆரம்ப சுகதார நிலையம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து வையாபுரி நகர் பகுதியில் 51 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் பூங்கா பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், கள்ளக்குறிச்சி - சேலம் பிரதான சாலை குறுக்கு தெரு உட்பட நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் 4 கோடியே 50 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான புது எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணிகளை பார்வையிட்டார். ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News