லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்
லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்டாலோ வாங்கினாலோ வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தாலோ, அரசும் நலத்திட்டங்களில் அதன் பலன்களை தகுதியற்றவர்களுக்கு கொடுத்து முதலீடு செய்தாலோ, அரசாங்க நிதியை பயன்படுத்தி ஊழல் செய்தாலோ, அரசு அலுவலர்கள் வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்தாலோ மக்கள் எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினாலோ, கேட்டாலோ, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தாலோ 0451- 2461828, 9498145647, 8300064769, 8300014090 - ல் தொடர்பு கொள்ளுமாறு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.