கன்னங்குறிச்சி அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உதவி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்
சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு மன்றம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா கலந்து கொண்டு போதைப்பொருட்களின் தீமைகள் குறித்தும், அதனால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.