சேலம் நெத்திமேட்டில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு தர்மஅடி
போலீசார் கைதுசெய்து விசாரணை
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 27 வயது பெண் சேலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் காலை வழக்கம்போல் எடப்பாடியில் இருந்து சேலத்துக்கு பஸ்சில் வந்தார். பின்னர் கொண்டலாம்பட்டி பைபாசில் இறங்கிய அவர் அரசு டவுன் பஸ்சில் ஏறி பழைய பஸ் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது நெத்திமேடு பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்தபோது கூட்டநெரிசலை பயன்படுத்தி பஸ்சில் இருந்த ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுட்டதாக தெரிகிறது. இதனை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள், கண்டக்டர் உள்ளிட்டோர் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து அந்த பெண் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுட்ட வீரபாண்டி பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (42) என்பவரை கைது செய்தனர்.