மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்!

அரசு செய்திகள்

Update: 2024-08-02 12:12 GMT
அன்னவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட கிளிக்குடி ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நிரந்தர அரசு நெல் கொல் முதல் நிலையம் வேண்டியும் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க கோரியும் மற்றும் உயர்நிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்தவேண்டும் என மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த கிளிகுடி ஊராட்சி மன்ற தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட கிளிக்குடி திருமண மஹாலில் கிளிக்குடி தளிஞ்சி கதவம்பட்டி பரம்பூர் குடுமியான்மலை புல்வயல் ஆகிய ஆறு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமை இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி இலுப்பூர் வட்டாட்சியர் சூரியபிரபு அன்னவாசல் யூனியன் ஒன்றிய குழு பெருந்தலைவர் VRS.ராமசாமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அபிராமிசுந்தரி மற்றும் வெங்கடேஷ பிரபு துவக்கி வைத்தனர் கோரிக்கை மனுவுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பணி ஆணைகளை வழங்கிய தமிழக அரசுக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர் இன் நிகழ்வில் கிளிகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.முத்துசெல்வம் அரசு அதிகாரிகள் பொதுமக்களை வரவேற்று பேசிய போது இந்த கிளிகுடி ஊராட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாண நிரந்தர அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டியும் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டியும் மாணவ மாணவியர் நலன் காக்க கிளிகுடி அரசு உயர் நிலைபள்ளியை மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்த வேண்டியும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்

Similar News