கோவை-ராமேஸ்வரத்துக்கு தினசரி ரயில் ராஜ்யசபா திமுக எம்பி கோரிக்கை மனு!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை: திமுக ராஜ்யசபா எம்பி அப் துல்லா மத்திய ரயில்வே வாரியத் தலைவர் ஜெயா வர்மா சின்ஹாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் கோயம்புத்துார் ராமேஸ்வரம் (வண்டி எண்16617,16618) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புதுக் கோட்டை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இதே போல் அகமதாபாத் திருச்சி அகமதாபாத் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்09419, 09420) ரயிலை புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம்(மண் டபம்) வரை நீட்டிப்பு செய்து வாரம் 3 முறை இயக்க வேண்டும். புதுக்கோட்டை வழியாகச் செல்லும் புதுச்சேரி கன்னியாகுமரி (16861 / 16862) வாராந் திர எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.