பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு..

பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு..

Update: 2024-08-02 12:18 GMT
பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.. பொள்ளாச்சி..ஆகஸ்ட்..02 பொள்ளாச்சி வட்டாரம் போக்குவரத்து துறை, பொள்ளாச்சி உட்கோட்டம் காவல்துறை மற்றும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது., உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் NIA கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த விழிப்புணர்வு முகாமில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராசன் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்., மேலும் முன்னாள் மாவட்ட முதன்மை போக்குவரத்து காப்பாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு விபத்து எவ்வாறு நடக்கிறது, விபத்தை எப்படி தவிர்க்கலாம் போன்ற வீடியோவை காண்பித்து விளக்க உரை ஆற்றினார்., சாலை விபத்துகளில் 20 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாகவும், எனவே மாணவ, மாணவிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றியும், சிக்னல்களை மதித்து ஓட்டுநர் உரிமம் பெற்று கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என்று இந்த முகாமில் மாணவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது..

Similar News