பா.ஜ.க அரசை கண்டித்து தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க அரசை கண்டித்து தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-02 12:44 GMT
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காதில் பூசுற்றி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இராவணன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்பொழுது அவர் கோவிந்தா கோவிந்தா என பாடல் பாடி மத்திய அரசுக்கு தன் கண்டன குரல்களை எழுப்பினார். அதனை தொடர்ந்து மாநில பிரச்சார துணைச் செயலாளர் துரை சம்பத் கண்டன கோஷங்களை எழுப்பினார். மோடி அரசை கண்டித்தும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் நகரத் தலைவர் சுப்பிரமணி மாவட்ட துணைச் செயலாளர் வீர பிரபாகரன் மற்றும் பல்வேறு கட்சியினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News